“Blue Whale” கேமில் இருந்து குழந்தைகளை பாதுக்காக்க அதிகநேரம் செலவழிக்க வேண்டும் என்று காவல் அதிகாரிகள்
நீலத் திமிங்கலம் விளையாட்டு போன்ற ஆபத்துகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்க அவர்களுடன் பெற்றோர்கள் அதிகநேரம் செலவழிக்க வேண்டும் என்று காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள குறிப்பில். “இணையதளத்தில் “நீலத் திமிங்கல சவால்” என்ற விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டு தங்களின் உயிரை இழக்கும் அளவுக்கு அடிமையாகி விடுகின்றனர்.
இதில் 50 வகையான ஆபத்தான குறிக்கோளைக் கடந்து இறுதியில் தற்கொலை செய்வதில் போய் முடியும். இதன் குறிக்கோள்களில், அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருப்பது, அகோரமான வீடியோ காட்சிகளை பார்ப்பது, தனக்கு தானே காயம் ஏற்படுத்துதல், உடலில் திமிங்கலம் வரைதல், கயிறு ஏறுதல் போன்றவை சவாலாக கொடுக்கப்படும்.
இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள், அசாதாரணமான செயல்கள், இறுக்கமான வன்முறை பழக்கவழக்கம், இணையதள இணைப்பில் தனியாக அதிகநேரம் இருப்பது, இந்த இணைப்பை மறைப்பது, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுவது, வழக்கத்திற்கு மாறாக உடலில் காயங்களுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றுவர். இவர்களை கண்காணிக்க வேண்டும்.
தங்களது பிள்ளைகள் சமூக ஊடக செயல்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கான முதிர்ச்சி இருக்கிறதா என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். நீலத் திமிங்கலம் போன்ற ஆபத்தில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற, பெற்றோர் அதிக நேரம் அவர்களுடன் செலவழிக்க வேண்டும். பிள்ளைகள் வெளிஅரங்க விளையாட்டுகளில் பங்கேற்க பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.