ப்ளூமவுண்டைன்ஸ் மலை பகுதி தீ விபத்து.! 400க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்.!
- நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கும் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதி.
- இந்தத் தீயில் இதுவரை 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரங்கள், செடி கொடி, மற்றும் 400க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்.
ஆஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதியில் பல அடி உயரமுள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருவதால் அப்பகுதியே நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட புதர் தீ படிப்படியாக அருகில் இருக்கும் பகுதிக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தத் தீயில் இதுவரை 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரங்கள், செடி கொடிகள் போன்றவைகள் எரிந்து விட்டன. மேலும் 400க்கும் மேற்பட்ட வீடுகளும் எரிந்து சாம்பலாகி விட்டன.
தற்போது அருகிலுள்ள ப்ளூமவுண்டைன்ஸ் மலை பகுதிக்கு தீ பரவி, அங்குள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதனால் அப்பகுதி நெருப்பால் சூழப்பட்டுள்ளது.