தமிழ் பேனர்கள் கிழிப்பு:கன்னட வெறியர்கள் அட்டகாசம்!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்துள்ளனர்.
நேற்று சுதந்திர தினம் என்பதாலும், ஆடிக்கிருத்திகை கொண்டாட்டம் காரணமாக பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகரில் தமிழ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த பேனர்களை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், கிழித்தெறிந்துள்ளனர். பேனர்களில் இருந்த தமிழ் வாசகங்களை, மட்டும் அவர்கள் தனியாக கிழித்தெறிந்துள்ளனர்.தமிழ் பேனர்கள் கிழித்தெறியப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.