கோலிவுட்டில் ஏஞ்ஜெலினா ஜோலியாக பிக் பாஸ் ஜூலியானா….! விரைவில்……
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜூலி மீது தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார்.
தான் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கு ஜூலியை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தான் புதிதாக தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், வெற்றிப்பட இயக்குனர்களிடம் பணிபுரிந்த சரவணன், இயக்குனர் ஆக இருப்பார் என்றும், படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருவதால் அதிலிருந்து வெளியே வந்தவுடன் இது தொடர்பாக ஜூலியை அனுக உள்ளதாகவும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.
ஜூலி கதாநாயகியாவாரா என்பது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தெரியவரும்.