கால்பந்து உலக கோப்பையில் விளையாட இருக்கிற இந்திய இளம் அணிக்கு கேப்டன் விராத் கோலி வாழ்த்து…!
“நன்றாக விளையாடுங்கள் இளைஞர்களே. எங்களைப் பெருமைப்படுத்துங்கள்” என்று 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் 6 முதல் 28 வரை நடைபெறுகிறது.
டெல்லி, கொல்கத்தா, குவாஹாட்டி, நவி மும்பை, மார்கோவா, கொச்சி ஆகிய 6 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறயிருக்கிறது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக களம் காண்கிறது .
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, இந்திய கால்பந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர், “நம்முடைய அணி, அமெரிக்காவுடன் முதலில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கும் இதர போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றாக விளையாடுங்கள் இளைஞர்களே. எங்களைப் பெருமைப்படுத்துங்கள்” என்று கூறி அவர் வாழ்த்தியுள்ளார்.