கல்லூரி மாணவனை கொடுவாளில் தாக்கிய வன்கொடுமை….
முத்துராஜா வயது 33 வயிற்று விளாத்தட்டில் இரண்டு பக்கமும் கத்தி குத்து ,அதில் ஒரு பக்கத்தில் எட்டு மூட்டு போடப்பட்டுள்ளது .
கழுத்தில் வந்த வெட்டை தடுக்க முயன்றபோது வலது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .
எங்களுடன் உட்கார்ந்து பேச முயன்றாலும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை ,அந்தளவிற்கு ஆதிக்க சக்திகள் மிக கடுமாக தாக்கியுள்ளனர் .
நாகராஜன் வயது 24 கல்லூரி மாணவர் ,இவருக்கு வயிற்று பகுதியில் கத்தி குத்து பட்டு பலத்த காயம் ஏற்பட்டு மிக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மேற்கண்ட இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனயில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று பார்வையிட்டோம் .சிபிஎம் மாவட்ட செயலாளர் மு.கந்தசாமி ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர் எ.பொன்னுசாமி ,டிஒய்எப்ஐ மாவட்ட நிர்வாகி எ.சுரேஷ் ,தியாகி இமானுவேல் பேரவை அமைப்பின் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, செங்கதிர் ,உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டோம் . ஆறுதல் கூறினார்கள்.
ஏன் இந்த தாக்குதல் ?
ஏனாதிக்கோட்டை கிராமம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் ,பார்த்திபனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது .
இக்கிராமத்தில் எடகொண்ட அம்மா கோவில் காப்பு கட்ட தேவேந்திர குலவேளார் இளைஞர்கள் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் சென்றுள்ளனர் .
காப்பு கட்டிட சில நிமிடங்கள் தான் இளைஞர்கள் தயாராகும் முன் ஒரு பையன் அலறிக்கொண்டே அரக்கபறக்க ஓடி வருகிறான்.
அதிர்ச்சியுடன் என்ன என்று கேடக பார்த்திபனூரிலிருந்து வந்த நம்ம ராமர் அண்ணனை அடிக்கிறாங்க ,இதை கேட்டதும் காப்பு கட்டாமல் ஊரின் பெரியவர் மணி அவர்களிடம் முறையிட்டுள்ளனர் . நியாயமானது என்று தாக்கியவர்களை கேள்வி கேட்டுள்ளார்.
“நீ என்னடா பள்ளபயலுக்கு வக்கலாத்து வாங்குவது “என அவரை தாக்க இதை தடுக்க முயன்ற முத்துராஜா உள்ளிட்ட மூன்று தாழ்த்தப்பட்ட (தலித்) இளைஞர்களுக்கு கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது .