பா.ஜ.க. – காங்கிரஸ் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பு :பெரும்பாலும் அடையாளம் தெரியாதவர்கள் !!
2015-16-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்ற தகவலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் திரட்டியது. அப்போது ஒரே ஆண்டில் அரசியல் கட்சிகள் 1033 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்தது.
நன்கொடை பெற்றதில் பா.ஜ.க. முதலிடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு ஒரே ஆண்டில் ரூ.571 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் 81 சதவீதம் அன்பளிப்பு அதாவது ரூ.461 கோடி ரூபாயை கொடுத்தது யார்-யார் என்ற விபரம் தெரியவில்லை. பா.ஜ.க. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், கூப்பன் விற்பனை, சந்தா தொகை மற்றும் கூட்டங்களில் திரட்டப்பட்ட நிதி வசூல் காரணமாக அதிக அளவு பணம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.