கூகிள் ப்ளேவுடன் இணையும் யூ டியூப் ரெட்!
யூ டியூபின் சந்தா சேவையான `யூ டியூப் ரெட்` தனது புதிய சேவையை வழங்குவதற்காக கூகிள் ப்ளே -வுடன் இணையவுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கொரியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் உள்ளது போல `யூ டியூப் ரெட்` -னை கூகுளுடன் இணைக்க உள்ளதாக யூ டியூபின் உலகளாவிய தலைவர் லயர் கோஹென் தெரிவித்துள்ளார்.
இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்த நிலையில், இரண்டு ஸ்ட்ரீமிங் சேவைகளிலும் பணிபுரியும் குழுக்களை தற்போது இணைத்துள்ளன. கூகுளின்ஸ்ட்ரீ மிங் சேவைகளான ‘கூகிள் மியூசிக்‘மற்றும் ‘யூடியூப்ரெட்` ஆகியன இப்போது இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சேவைகள் முலம் பயனர்கள், வீடியோக்களில் விளம்பரங்களை அகற்றும் வசதி பெறலாம் மற்றும் வீடியோக்களை ஆஃப்லைனில் சேமிக்க உதவுகிறது.