மல்யுத்தத்தில் கலக்க காத்திருக்கும் இந்திய வீர மங்கை! சூடு பிடிக்குமா மல்யுத்தம்..
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அண்டர் டேக்கர், ஹல்க் ஹோகன், கேன், ஆண்ட்ரே-தி-ஜெயண்ட், டிரிபிள்-ஹச் போன்ற பிரபலங்கள் இந்த விளையாட்டை உலகப் புகழடையச் செய்தனர்.
தற்போது இந்த நிறுவனம் பெண்கள் பிரிவு போட்டிகளுக்காக இந்தியாவைச் சேர்ந்த கவிதா தேவியை ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தகவலை WWE சாம்பியனான இந்திய வீரர் ஜிந்தர் மஹால் தெரிவித்தார்.
முன்னதாக தி கிரேட் காளி, ஜிந்தர் மஹால் ஆகிய இந்திய ஆண் வீரர்களை இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்யும் முதல் இந்தியப் பெண்ணாக கவிதா தேவி ஆகியுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி 2016-ல் நடந்த தெற்காசிய போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த மல்யுத்த ரிங்கில் களம் காணும் கவிதா தேவி இதற்கான பயிற்சியை கிரேட் காளியிடம் பெற்று வருகிறார்.
விரைவில் WWE போட்டிகளில் கவிதா தேவியை இந்திய ரசிகர்கள் கண்டு ரசிக்
சிறிது நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அதில் இந்தியாவில் நடைபெறும் WWE பெண்கள் போட்டி ஒன்றில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர், தான் வெற்றி பெற்ற பின்னர், என்னை வீழ்த்த இந்திய மண்ணில் எந்தப் பெண்ணும் இல்லையா என சவால் விடுவார்.
அப்போது பார்வையாளராக இருந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண் ஒருவர் திடீரென களத்தில் இறங்கி அந்த வீராங்கனையை தலை மீது தூக்கி வீழ்த்துவார்.
அந்தப் பெண் வேறுயாருமல்ல சாட்சாத் கவிதா தேவியே தான்.ஆனால் நம் நாட்டின் கலாச்சாரம் படி இந்த பெண் கவர்ச்சிஉடை அணிந்துதான் விளையாட போகிறாரா என்பது மிக பெரிய கேள்வி எழுப்பி உள்ளது.