உ.பி.யில் பயங்கரம் தூங்கி கொண்டு இருந்த சகோதிரிகளுக்கு தீ வைப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 சகோதரிகள் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளனர். 19 மற்றும் 17 வயது நிரம்பிய சகோதரிகள் வீட்டில் கொசு வலைக்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, வீட்டிலிருந்தவர்கள் தீயை அணைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மூத்த சகோதரி 95 சதவீத தீக்காயங்களுடனும், இளைய சகோதரி 60 சதவீத தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட சகோதரிகளில் ஒருவர், நானும், என் சகோதரியும் ஒரே படுக்கையில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது சுமார் 2 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எங்கள் அருகில் வந்து எங்கள் மீது பெட்ரோலை ஊற்றி, தீ பற்ற வைத்தார் என்று தெரிவித்துள்ளார். இளைஞர் ஒருவர் சில மாதங்களாக தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக இளைய சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 செல்போன்களை கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.