மத்திய அரசு அறிவிப்பு : மனைவியுடன் கட்டாயமாக உறவு கொண்டால் அது பலாத்காரமில்லை
மத்திய அரசு டில்லி உயர்நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றில் மனைவியுடன் கணவன் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்கார குற்றம் ஆகாது என தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 375 ஆம் பிரிவின் கீழ் மனைவியுடன் கணவன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வதை பலாத்கார குற்றம் என அறிவிக்கக் கோரி டில்லி உயர் நீதி மன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் ஆகியோர் விசாரித்து வந்தனர். மனுதாரர்களில் வழக்கறிஞரகளில் ஒருவர் திருமணம் செய்துக் கொள்வது பலாத்காரம் செய்ய கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல என வாதிட்டிருந்தார். இது பற்றிய விளக்கத்தை அளிக்குமாறு அரசுக்கு டில்லி உயர் நீதி மன்றம் கடிதம் அனுப்பி இருந்தது.
மத்திய அரசு அளித்த் பதிலில், “ஏற்கனவே வரதட்சணை கொடுமை, மற்றும் புகுந்த வீட்டார் கொடுமை பற்றிய சட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதி மன்றம் உட்பட பல நீதி மன்றங்கள் தங்கள் எதிர்ப்பை பதிந்துள்ளன. இந்நிலையில், மனைவியை கட்டப்படுத்தி உறவு கொள்வதை பலாத்கார குற்றம் ஆக்கக் கூடாது. அப்படி மாற்றினால், அது பெண்கள் தங்களுக்கு பிடிக்காத கணவனை துன்புறுத்த எளிதான வழியாகி விடும். நமது நாட்டின் சமூக நிலை, பொருளாதார ஏற்றத் தாழ்வு, ஆகியவைகளோடு, இந்த சட்டமும் திருமண உறவை கெடுத்து விடும்” என சொல்லி இருந்தது.
இந்த வழக்கில் இனி இந்த கருத்தின் மேல் விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.