உங்கள் போனில் அழிந்து போன காண்டாக்ட்களை மீட்பது எப்படி?
நண்பர்கள் மற்றும் வியாபார ரீதியிலான காண்டாக்ட்களை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் கூகுள் காண்டாக்ட்டில் அழந்து போன காண்டாக்ட்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
வழிமுறைகள்:
முதலில் புதிய கூகுள் காண்டாக்ட் வலைதளத்தை பிரவுசரில் திறந்து நீங்கள் காண்டாக்ட்களை பதிவு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி சைன்-இன் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
வலைதளத்தை திறந்ததும், மெனு ஆப்ஷனில் இருக்கும் மோர் (More) பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து ரீஸ்டோர் காண்டாக்ட் (Restore Contacts) எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இனி திரையில் தெரியும் டைம் ஃபிரேமில் நீங்கள் அழித்த காண்டாக்ட்களில் மீண்டும் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து ரீஸ்டோர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.