வெங்கையா நாயுடு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்!
இந்நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளாராக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் வெங்கையா நாயுடுவை நேற்று அறிவித்தது.வெங்கையா நாயுடு தொடர்ந்து நான்கு முறை ராஜ்யசபா உறுப்பினாராக இருந்து வருகிறார். பா.ஜ.க-வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் இவரை கட்சி முன்னிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘தனது அனுபவத்தால் வெங்கையா நாயுடு ராஜ்யசபையைச் சிறப்பாக வழி நடத்துவார்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் வெங்கையா நாயுடு தான் வகித்து வந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.