நினைத்ததை சாதித்த கோஹ்லி&ரவி சாஸ்திரி கோஷ்டி..

Default Image
மும்பை: தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நெருக்கடி காரணமாக இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் அவர் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பாததால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். 
அதேபோல், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு தொடருக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் இருக்க கங்குலி குழு பரிந்துரைத்தது. ஆனால் சாஸ்திரி அதை எதிர்த்துள்ளார்.
எனவே ரவி சாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்த பிறகு, மற்ற பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பதாக நிர்வாக கமிட்டி அறிவித்தது. இந்த நிலையில், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பந்து வீச்சு உதவி பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் அடுத்த உலக கோப்பை தொடர் வரை பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவி சாஸ்திரி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக இருந்த போது பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். எனவே ரவி சாஸ்திரி-கோஹ்லி அன்டுகோவின் நெருக்கடிக்கு பிசிசிஐ பணிந்துவிட்டது.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்