பைக் வாங்கி கொடுக்காததால் பெயிண்டர் தற்கொலை
முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் யுவராஜ் என்ற ராஜா, 24; பெயின்டரான இவர் தனது பெற்றோரிடம் புதிய பைக் வாங்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால், குறைந்த பணத்தை மட்டுமே கொடுத்து, மீதி தொகையை சம்பாதித்து பைக் வாங்கி கொள்ளுமாறு தந்தை கூறிவிட்டார்.இதில் விரக்தியடைந்த ராஜா, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.