நெய் உடலுக்கு நல்லதா?

Default Image

பொதுவாக பலர் நெய்யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால்நெய்வெறும்கொழுப்புமட்டும்நிறைந்தஉணவு,ரத்தக்கொழுப்பை உயர்த்தும்குணம்உடையது என்பதே அவர்களின்எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

நெயின் நன்மைகள்:

உடல் சோர்வை தடுத்து புத்துணர்ச்சியை தரும்.
நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
கண் பார்வையை அதிகரிக்கவும்.
குடல் புண்கள் ஆறுவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.. 

நெயின் மருத்துவ குணங்கள்:

நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்க வைட்டமின்கள் உள்ளன. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்