அஜித்திற்கு இது எத்தனையாவது ஆப்பரேசனோ தெரியல
அஜித் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். எந்த ஒரு இடத்தில் அவருடைய ரசிகர்கள் அஜித்தை கைவிட்டது இல்லை.
இந்நிலையில் அஜித் விவேகம் படத்தில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துவிட்டார், இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர், ஆனால், சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.