செரிமானத்தை தூண்டும் மாங்காய்

Default Image

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம். 
மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாங்காய், மாம்பழம், இலை, பட்டை, பூ என அனைத்தும் மருந்தாகிறது. மாவிலைகள் தொண்டைக்கட்டு, வலி, வீக்கத்தை சரிசெய்யும். மாவிலைகளை காயவைத்து தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, வீக்கம் குணமாகும். மாவிலையை புகையாக்கும்போது கொசுக்கள் வராது. மாங்காயை பயன்படுத்தி ஜீரண கோளாறுகளை போக்கும் மருந்து தயரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்ரி, புதினா, வெல்லம். செய்முறை: மாங்காய் துண்டுகளுடன், இஞ்சி, ஜாதிபத்ரி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் சேர்த்து நீர்விடவும். இதனுடன் வெல்லம், ஒரு ஸ்பூன் புதினா சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர செரிமான கோளாறு சரியாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாங்காய் புளிப்பு சுவை உடையது. பசியை தூண்டக் கூடியது. குறைவாக சாப்பிடும்போது வயிற்று வலியை சரிசெய்யும். அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும். உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. வயிற்று கோளாறுகளுக்கு அற்புத மருந்தாகிறது. ருசியை தரக்கூடியது. இளம்தாய் மார்கள் மாங்காயை விரும்பி சாப்பிடுவார்கள். மாவிலையை பயன்படுத்தி தொண்டை வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாவிலை, இஞ்சி, பனங்கற்கண்டு. செய்முறை: 6 மாவிலைகளை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர தொண்டைக்கட்டு, வலி, இருமல் விலகிப்போகும். வாய்ப்புண், நாக்கில் ஏற்படும் புண்கள் ஆறும். மாவிலை நோய் கிருமிகளை தடுக்கும் தன்மை உடையது. 
மாம்பருப்பை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, பனங்கற்கண்டு.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்