தீக்காயம் தழும்பாக மாறாமல் இருக்க இயற்கை வைத்தியங்கள்!!
சூடாக எதாவது ஒரு பொருள் நம் உடலில் பட்டால் , உடனடியாக அதனை குணப்படுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வீட்டில் இருக்கும் பொருட்கள் கொன்டே நெருப்பு காயத்தை ஆற்றவும், விரைவான நிவாரணத்திற்கும் இவைகள் பயன்படுகின்றன.அப்படி உடனடியாக பலனைத் தரும் குறிப்புகளை காண்போம்.
வழிமுறைகள்:
சமைக்கும் போது உணவு பொருள் நம் மீது கொட்டி விடுவதால் தீ காயங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும்போது உடனடியாக சேதப்பட்ட இடத்தை குழாய் தண்ணீரில் நேரடியாக காண்பிக்க வேண்டும் .
தொடர்ச்சியாக சில நிமிடங்கள் தண்ணீரில் காண்பித்து பின்பு துணியால் ஒத்தி எடுக்கவும். பின்பு காயத்தின் மேல் பல் தேய்க்க பயன்படுத்தும் பேஸ்டை தடவவும்.
ஈரமான டீ பையை காயத்தின் மீது வைத்து ஒரு துணியை கொண்டு கட்டி விடுவதனால் பைகள் கீழே விழாமல் இருக்கும். பிளாக் டீயில் டானிக் அமிலம் உள்ளது.அது காயத்தில் உள்ள சூட்டை உறிஞ்சும் தன்மை கொண்டது.
தேன் எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த மருந்து. தேனை காயத்தின் மேல் தடவுவதால் தொ ற்று ஏற்படாமல் தடுக்க படுகிறது. காயத்தில் இருக்கும் நுண் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு சருமத்தை பழைய நிலைக்கு மாற்றுகிறது. காயத்தை குளிர்ச்சியடைய செய்து, விரைவில் ஆற்றுகிறது.
பாலில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு சத்து காயத்தை ஆற்றுவதில் வினை புரிகிறது . காயம் ஏற்பட்ட இடத்தை பாலின் ஒரு 10 நிமிடங்கள் வைப்பதால் விரைவான குணம் தெரியும். கொழுப்பு அதிகமுள்ள தயிர் கூட காயத்திற்கு மருந்தாகும்.
தீ காயத்தினால் ஏற்பட்ட வடு மறைய, எலுமிச்சை சாறுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து அந்த வடுவில் தினமும் மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சை சாறில் உள்ள அசிட்டிக் அமிலம்,வடுவை லேசாக்கி மறைய உதவும்.
குறிப்பு :
தீ காயங்கள் ஏற்படும்போது காயத்தின் மேல் ஐஸ் கட்டியை வைத்து தடவ கூடாது. இது இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதனால் திசுக்கள் மேலும் சேதமடைகின்றன. இதற்கு பதிலாக, காயப்பட்ட இடத்தை ஓடும் தண்ணீரில் வைக்கலாம். குழாய் அடியில் காயப்பட்ட இடத்தை காண்பிப்பதால் மேலும் காயம் பரவாமல் தடுக்க படுகிறது.