பாகிஸ்தானில் இடைக்காலப் பிரதமராக ஷாஹித் காகான் அப் பாஸி பொறுப்பேற்றார்
இஸ்லாமாபாத், ஜூலை 30- பாகிஸ்தானில் இடைக்காலப் பிரதமராக ஷாஹித் காகான் அப் பாஸி பொறுப்பேற்பார் என்று ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சி சனிக்கிழமை அறிவித்தது.நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரை, ஷாஹித் காகான் அப் பாஸி பிரதமர் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்க அப்பாஸி முழு மனதுடன் சம்மதித்தாகத் தெரி விக்கப்பட்டது.தொழிலதிபரான ஷாஹித் காகான் அப்பாஸி முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.ஊழல் புகார் மீதான விசா ரணையைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்த ரவிட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.அடுத்த பிரதமரைத் தேர்ந் தெடுப்பது குறித்து ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சி கடந்த இரு நாட் களாக பல சுற்று ஆலோசனைகள் நடத்தியது.நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் பெயர் பிரதமர் பதவிக்கு முன் வைக்கப்பட்டபோது கட்சியினர் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ள அவர் உடனடியாகப் பிரதமர் பதவி ஏற்க முடியாது. பாகிஸ் தான் அரசியல் சட்டப்படி நாடா ளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரே பிரதமர் பதவி ஏற்க முடி யும். எனவே நவாஸ் ஷெரீஃபின் தொகுதி அல்லது வேறு ஏதே னும் தொகுதியில் இடைத்தேர்த லில் வெற்றி பெற்று நாடாளு மன்ற உறுப்பினரானதும் அவர் பிரதமர் பொறுப்பேற்பார் என்று முடிவாகியது.