எந்த எதிரிகளையும் வீழ்த்த எங்களது இராணுவத்தால் முடியும்:சீனா அதிபர் ஜி ஜின்பிங்
பெய்ஜிங்:சீன ராணுவத்தின் 90-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு மங்கோலியா அருகே உள்ள சுரீஹே பகுதியில் இன்று சுமார் ஒரு லட்சம் வீரர்கள் பங்கேற்ற முப்படை அணிவகுப்பு மற்றும் போர் விமானங்களின் சாகச காட்சிகளை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிட்டார்.
129 நவீன ரக போர் விமானங்கள் மற்றும் 571 அதிநவீன போர்க் கருவிகளும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட ஜி ஜின்பிங் ராணுவ தளபதிகள், உயரதிகாரிகள் மற்றும் வீரர்கள் இடையே பேசினார்.
அப்போது அவர் “சீனா மீது, உலகின் எந்த நாடு போர் தொடுத்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சீன ராணுவத்தால் எந்த எதிரிகளையும் வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார்.
சீனா ராணுவம் தொடர்ச்சியாக எல்லையில் அத்துமீறுவதாக இந்திய பிஜேபி அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.ஆனால் இந்த குற்றசாட்டை சீனா கம்யூனிஸ்ட் அரசு மறுத்து வருகிறது,மேலும் இந்திய அரசுதான் தொடர்ந்து அத்துமீறுவதாக சீனா அரசு தனது அதிகாரபூர்வ செய்திதாளில் செய்தி வெளியீட்டுள்ளது.