புதுவையில் நீட் தேர்வை தடை செய்ய கோரி சவப்பாடை ஊர்வலம்..!
அனிதா தற்கொலைக்கு மத்திய அரசும், தமிழக அரசும் தான் காரணம் என வலியுறுத்தி புதுவையில் கடந்த 2 நாள்களாக சமூக, மாணவர் அமைப்புகள் சார்பில் கடந்த 2 நாள்களாக ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்து வருகிறது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக புதன்கிழமை தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சமூக அமைப்பினர், நீட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூடினர். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், அமித்ஷா ஆகியோர் உருவ பொம்மைகள் வைத்த சவப்பாடை அமைத்தனர்.
பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு கிழக்கு கடற்கரைச் சாலை கொக்கு பார்க் வழியாக சாரம் பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர். அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீஸார் கைது