இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் : வெங்கைய்யாவுக்கே வெற்றி வாய்ப்பு
புதுடில்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜாஜியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.இதில் மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 485 பேர் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.