ஆசிரியரை தாக்கிய ஏபிவிபி மாணவர்
ஏபிவிபி மாணவர் பிரதீப் போகத் என்பவருக்கு ஆண்டு மதிப்பீட்டு ஜீரோ மதிப்பெண் வழங்கிய ஆசிரியரை தாக்கியதாக ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி மாணவர் மீது டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பகத் குளோபல் பிசினஸ் ஆபரேஷன்ஸ் பாடப்பிரிவில் முதுகலை பட்டயப்படிப்பு பயின்று வந்தார். இக்கல்லூரி முதல்வர் ருஸ்தகி கூறுகையில், ”போகத் ஜிரோ மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். ஏன் என்றால் அவர் கல்லூரிக்கு வருவதே கிடையாது.
அஸ்வானி குமார் என்ற ஆசிரியரை கடந்த 14ம் தேதி மாலை 5 மணிக்கு கல்லூரியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து தாக்கியுள்ளார். அசிங்கமான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதன் பின்னர் நாங்கள் மவுரைஸ் காவல் நிலையம் சென்று புகார் செய்தோம்” என்றார்.
போகத் கூறுகையில்,” ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய சங்கம் என்பதால் என்னை தனிமை ப டுத்திவிட்டனர். கடந்த ஆண்டு கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டது முதலே ஆசிரியர் அஸ்வானி என்னிடம் பிரச்னை செய்து வந்தார். என்மீது காழ்ப்புணர்சி கொண்டிருந்தார்.
அவர் அரசியல் ரீதியாக மாணவர்கள் செயல்படுவதை விரும்பவில்லை. அதனால் எனக்கு மதிப்பீட்டில் ஜீரோ மார்க் வழங்கினார். அதேபோல் அனைத்து ஆசிரியர்களையும் அவ்வாறு செய்ய அவர் கேட்டுக் கொண்டார் ” என்றார்.
போகத்துக்கு எதிராக காயங்கள் ஏற்படுத்துதல், தவறான செயல்பாடு, குற்றச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாவட்ட துணை கமிஷனர் ஜதின் நார்வால் தெரிவித்தார்.