நாளை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் : காவல்துறை தகவல்!!!

Default Image
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் எடுத்துச் செல்லும் புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட 6 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை குறித்து சென்னை பெருநகர காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுனர், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 விதிமுறைகளை மீறுவோரிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த  விதிகளை மீறுவோரின் அசல் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டப்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக குறைந்தது 3 மாதங்கள் தற்காலிகமாக ரத்து செய்து வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்