‘ரொனால்டோவிற்கு வாய்ப்பில்லை’
மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என, அவ்வணியின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ, தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கழகத்துக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்திருந்த நிலையிலேயே, அதை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, “சாத்தியமில்லாத வீரர்களைப் பற்றிச் சிந்தித்து, என்னுடைய நேரத்தை நான் வீணாக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.