கோஹ்லியின் ராஜதந்திரத்தை முறியடித்த தென் ஆப்ரிக்கா! சமாளிப்பரா இந்திய கேப்டன் …….
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த மூன்று வரமாக முதல் இடத்தில இருந்த இந்திய அணி தற்போது சறுக்கலை சந்தித்தது. ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணி முதல் இடத்தை பிடித்து இருந்ததபோதிலும் இப்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அணியை விட அதிக புள்ளிகள் பெற்று தற்போது தென் ஆப்பிரிக்கா அணியே தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.ஐ.சி.சி வெளியிட்ட ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
தென் ஆப்பிரிக்கா அணி இந்த அணியை விட 251 புள்ளிகள் தரவரிசையில் அதிகமாக பெற்றுள்ளதாக ஐசிசி பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்
இந்தியா- ஆஸ்திரேலியா தொடர்
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. டி-20 தொடரானது ஒரு ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் விளையாட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஒருநாள் தரவரிசையில் முதல் இடம்
இந்திய அணி முதல் இடம்
இந்த நிலையில் இந்தத் தொடரில் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்திற்கு வந்தது. ஏற்கனவே டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் முதல் திட்டத்திற்கு வந்ததால் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன் முதலிடத்ததில் இருந்த சவுத் ஆப்ரிக்கா அணியை இரண்டாம் இடத்திற்கு அனுப்பி இந்தியா முதல் இடம் வந்தது குறிபிடத்தகது.
தென் ஆப்ரிக்கா முதல் இடம்
இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சவுத் ஆப்ரிக்கா
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 104 வித்தியாசத்தில் சவுத் ஆப்ரிக்கா அணி வங்கதேச அணியை எளிமையாக வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி காரணமாக ஐசிசி ஒருநாள் தரவரிசை புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி அதிக புள்ளிகளைப் பெற்றது. இதன் மூலம் மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.