ஒரு ரூபாய்க்கு ஸ்மார்ட்போனா..?
சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பல்வேறு சலுகைகளை அளிக்க இருக்கிறது.
‘மீ உடன் தீபாவளி’ (Diwali with Mi) என்ற பெயரில் செப்டம்பர் 27ம் தேதி காலை 10 மணி முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை இச்சலுகை அளிக்கப்படும்.மீ மொபைல் அப்ளிகேஷன் மூலம் தினமும் மதியம் 2 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பிட் டூ வின் (Bid to Win) என்ற போட்டி நடைபெறுகிறது.
இதில் ரெட்மி நோட் 4, Mi ரவுட்டர் 3C, ரெட்மி 4, ப்ளூடூத் மினி ஸ்பீக்கர், Mi செல்ஃபி ஸ்டிக், ரெட்மி 4A, Mi பேண்ட் HRX எடிஷன், Mi கேப்சூல் இயர்போன், Mi வைபை ரிப்பீட்டர், Mi பேக்பேக் மற்றும் Mi VR பிளே ஆகியவற்றை வெறும் ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கலாம்.