ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதாம்..!
நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகிய இரண்டுமே கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாகும். இந்த புளிப்பு ஏப்பத்திற்கு அதிகமாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சிரமமாக இருக்கும்.இதற்கு ஐஸ் க்ரீம் சாப்பிடுவது ஓர் நல்ல தீர்வாக அமையும்.
ஐஸ் க்ரீமானது உங்களது செரிமான மண்டலத்தை குளிர்ச்சியடைய செய்கிறது. வெண்ணிலா ஐஸ் க்ரீம் மற்ற ஐஸ் க்ரீம்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த கலோரிகளை கொண்டது. இது கொழுப்பு நீக்கப்பட்டதும்.இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம் வராது.
இந்த முறையை கடைப்பிடிப்பதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். இது கர்ப்பகாலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் செய்ய கூடாது.