மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் காலம் வந்து விட்டது அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேச்சு..!
தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அனைத்து கட்சி தலைவரையும் சந்திக்கும் ஒரே தலைவர் கலைஞர் தான். கலைஞருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை. அதே போன்று கரைபடாத கைக்கு சொந்தக்காரராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றன. அவர்களுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து விட்டது. இதனால் அனைவரும் விருப்பு, வெறுப்பு இன்றி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தி.மு.க இயக்கத்தில் இருந்து கொண்டு, அதனை ஒழிக்க நினைத்தால் அது நடக்காது. அவர்களை தூக்கி எறிய தயங்கமாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.