சென்னைக்கு வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்
இந்திய பிரதமர் கொச்சிக்கு சென்றிருந்தால் கூட இந்த அளவுக்கு கூட்டம் இருந்திருக்காது.
பாலிவுட் கவர்ச்சி நடிகை கொச்சிக்கு வந்தபோது கடலலை போல் மனித அலைகள் தெரிந்தன.
அவரை காரை சுற்றி ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டதால் கார் இன்ச் இன்ச் ஆக ஊர்ந்தது
சன்னிலியோன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் தனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று. இந்த நிலையில் கொச்சியை கலக்கு கலக்கு என்று கலக்கிய சன்னிலியோன் அடுத்து சென்னைக்கு வரவுள்ளாராம்.
பிரபல தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் ‘இந்திரஜித்’ திரைப்படத்தில் சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளாராம்.
இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சன்னிலியோன் சென்னைக்கு வெகுவிரைவில் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.