பொன்னாங்கண்ணி கிரை உடலுக்கு நல்லதா?

Default Image
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.



பொன்னாங்கண்ணி, புளிச்ச கீரை, செவ்வாழை ஆகியவற்றை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கி, உடலுக்கு பலம் தரும் மருந்துகள் குறித்து பார்க்கலாம். சிவப்பு பொன்னாங்கண்ணி பல்வேறு நன்மைகளை கொண்டது. உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன் தோலுக்கு மினுமினுப்பை கொடுக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம், அழகை தரக்கூடிய கீரை இது. புளிச்ச கீரையில் கால்சியம், இரும்பு சத்துக்கள் அதிகளவில் உள்ளன. சுவையான உணவாக விளங்கும் இது அற்புதமான மருந்தாகிறது. செவ்வாழை உணவாகி மருந்தாகிறது.



தேவையான பொருட்கள்: 

புளிச்ச கீரை, நெய், மிளகுப்பொடி, உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உருகியதும் நசுக்கி வைத்திருக்கும் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் மாறும். நாவறட்சி, சோர்வு நீங்கும். உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

செய்முறை: 

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து பசையாக்கி எடுக்கவும். இதனுடன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர கோடைகாலத்தில் ஏற்படும் கண் எரிச்சல், கண்சிவப்பு போன்றவை மாறும். உடல் சோர்வு நீங்கும்.



சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையில் நார்ச்சத்து உள்ளது. இது நோய்கள் வராமல் பாதுகாக்கும். மலச்சிக்கலை போக்கும். கண்களுக்கு கூர்மையான பார்வையை கொடுக்கும். சிவப்பு பொன்னாங்கண்ணியில் இரும்பு சத்து, விட்டமின், மினரல் உள்ளிட்டவை உள்ளது. சிறுநீர் தாரையில் ஏற்படும் நோய்களைகுணமாக்குகிறது. செவ்வாழையை பயன்படுத்தி உடல் பலகீனத்தை போக்கி, உடலுக்கு பலம் தரும் உணவு தயாரிக்கலாம். .



Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்