இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு ஒரு கோடி ரூபாய் காத்திருகிறது
ஹைதராபாத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டுமனை பரிசாக அளிக்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை தவறிவிட்டபோதும், இந்த அணியின் சிறப்பான விளையாட்டை நாட்டின் பிரதமர் உட்பட அனைவரும் பாராட்டினர்.
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்ற கேப்டன் மிதாலி ராஜூக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தவண்ணமே இருக்கின்றன. இந்நிலையில், தெலுங்கானா மாநில அரசு சார்பில் மிதாலிக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டுமனை பரிசாக அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.மிதாலியை நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த அவர் அப்போது , இந்த அறிவிப்பை வெளியிட்டார்.