உ பியில் ஆக்சிஸன் அல்ல வந்தே மாதரமே கட்டாயம்..!
மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ள உ பி யில் மனிதர்களுக்கு ஆக்சிஸன் இல்லை என்பதை அறிந்தோம். பாஜக வின் அந்த கேடுகெட்ட ஆட்சி தனது தோல்விகளை மறைக்க மதவெறியையே நம்பியுள்ளது. அங்குள்ள மதராசாக்கள் சுதந்திரதினத்தன்று வந்தே மாதரம் பாடலைப் பாடவேண்டும், அதை வீடியோ எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று (தினமணி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏகக் கடவுளுக்கு இணை வைக்ககூடாது, அவரைத்தவிர வேறு எதையும் வணங்கக் கூடாது என்பது இஸ்லாமின் அடிப்படை இறையியல். அதற்கு விரோதமாக நாட்டை இந்து
தெய்வங்களாக சித்தரித்து வணங்கச் சொல்லுகிற பாடல் வந்தே மாதரம். அதைபாடச் சொல்லி இஸ்லாமியப் பள்ளிகளை வற்புறுத்துவது அநியாயம், அக்கிரமம். அந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய பார்க்கும் சதிவேலை இது. சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறுவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தது ஆர்எஸ்எஸ் கூட்டம்.காங்கிரசாரும்கம்யூனிஸ்டுகளும் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துவிட்ட அந்த கூட்டம்
இன்று சிறுபான்மையோரின் மத சுதந்திரத்தை பறிக்கிறது. சரித்திரம் தன்
தலையில் தானே அடித்துக் கொள்கிறது.
-பேராசிரியர் அருணன்