நான் மீண்டும் வருவேன்!-இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் நம்பிக்கை..!
நான் அதிகமாக தவறுகள் செய்யவில்லை, எனக்கான வாய்ப்பு மீண்டும் வரும் என நம்புகிறேன்.பெரிய கூட்டத்துக்கு முன்னால் தான் விளையாட வேண்டும் என எப்போதும் நான் நினைத்ததில்லை. சாதாரண உள்ளூர் போட்டியில் விளையாடுவதை கூட மகிழ்ச்சியாக தான் நினைப்பேன், எதையும் மிஸ் செய்வதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு அணி தலைவருக்கும் அணி இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பார்வை உள்ளது, அதே போல எங்கள் அணி தலைவர் பார்வையை நான் பெரிதும் மதிக்கிறேன் என இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்