நிதிஷ்குமாரின் வெற்றியை இப்போதும் பாகிஸ்தான் கொண்டாடுகிறதா..?:சிவசேனா பிஜேபியிடம் கேள்வி
மும்பை: பீகாரில் கடந்த 2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி நிதிஷ் வெற்றி பெற்றால் பாக்., கொண்டாடும் என பிஜேபி., தலைவர் அமித் ஷா கூறியிருந்தார்.ஆகையால் இப்போது பிஜேபி., ஆதரவுடன் முதல்வர் பதவியேற்றிருக்கும் நிதிஷின் வெற்றியையும் பிஜேபி., கொண்டாடுகிறதா?? என பா.ஜ.,வை சிவசேனா விமர்சித்துள்ளது.
பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப்பிடித்த நிதிஷ்குமார், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து, பின் பா.ஜ.க, ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். 2014 பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, நிதிஷ் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் கொண்டாடும் என, பா.ஜ.க, தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்திருந்தார். தற்போது பா.ஜ., ஆதரவுடன் நிதிஷ் முதல்வராகியிருக்கும் நிலையில், சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் இதனை கடுமையாக விமர்சித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், நிதிஷ் குமார் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் கொண்டாடும் என அமித் ஷா கூறினார். அரசியலில் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் நீண்ட காலம் இருப்பதில்லை. இப்போது, நிதிஷ் முதல்வராக, பா.ஜ.க, ஆதரவு தெரிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் கொண்டாடுகிறதா..? என்பதை, பா.ஜ.க, விளக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் சிவசேனா-பா.ஜ.க, கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.