துரந்தோ ரயில் தடம் புரண்டது நிலச்சரிவே காரணம் முதல்கட்ட விசாரணை தகவல்
நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில்திதிவாலாவிற்கு அருகே செவ்வாயன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் நிலச் சரிவே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் என்ஜின்மற்றும் 5 பெட்டிகள் நடைமேடை மீது மோதி தடம்புரண்டது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை எனவும் தகவல் வெளியானது.மகாராஷ்டிராவில் துரந்தோ விரைவு ரயில் செவ்வாயன்று காலைதடம்புரண்டது. நாக்பூரில் இருந்து மும்பைக்கு சென்றுக்கொண்டிருந்த ரயில், அசாங்கான் பகுதியில் திடீரென தடம் புரண்டது.
இதில் ரயிலின்6 பெட்டிகள் தடம் புரண்டன. இதன்காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து, கல்யாணில் இருந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இது கடந்த பத்து நாட்களில் நடந்த உயிரிழப்புகள் எதுவுமில்லாத மூன்றாவது விபத்தாகும்.விபத்து காரணமாக அந்த வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் வேறு பாதையில் மாற்றி விடப் பட்டன.விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நிலச்சரிவே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.