அனிதாவின் உயிரைப் பறித்தது நீட் மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் கொதிப்பு
அரியலூர், செப். 1 –
‘நீட்’ தேர்வு என்ற வஞ்சகத்தால், மருத்துவர் ஆகும் வாய்ப்பை இழந்தஅரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது, தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்புக்கும் உள்ளாக்கியுள்ளது.அனிதாவின் மரணத்திற்கு, மத்திய – மாநில ஆட்சியாளர்களே காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவி அனிதானின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.
அரியலூர் மாவட்ட குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா, இளம் வயதிலேயே தாயை பறிகொடுத்தவர்.திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி யாக இருக்கும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். வறுமைவாழ்க்கையில் துரத்தியபோதும் கல்வி தாகம் கொண்டவராகஇருந்த அனிதா, எப்படியாவது படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தார்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 478 மதிப்பெண்கள் பெற்ற அனிதா, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99, தமிழில்96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண் கள் எடுத்தார். நன்றாக படிக்கும் அனிதாவை அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்று, கட்டணச் சலுகை அளித்து, மேல்நிலைக் கல்வி வாய்ப்பைத் தந்தது. விடுதி வசதியும் கிடைத்தது.
தனது குடும்ப நிலையையும் புரிந்து, விடா முயற்சியுடன் படித்த அனிதா பன்னிரண்டாம் வகுப்புத் தேர்விலும் சாதித்தார். அவர் 1200-க்கு1176 மதிப்பெண்களைப் பெற்றார். அவரது மருத்துவர் கனவு நன வாகும் சூழல் கனிந்தது.மாநில பாடத் திட்டத்தின்படி, மருத்துவப் படிப்பில் சேருவதற்கான அவரது கட்-ஆப் மதிப்பெண்கள் 196.5 என்பதால், அவருக்கு டாக்டர் படிப்பிற்கு இடம் கிடைப்பது உறுதி யானது. ஆனால், மருத்துவப் படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்விலும் வெற்றிபெற்றாக வேண்டும் என்று மத்தியபாஜக அரசு போட்ட உத்தரவு, மாணவி அனிதாவை நிலைகுலை யச் செய்தது. என்ன ஆனாலும் டாக்டராகி விடவேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த அனிதா, சிபிஎஸ்இ பாடத்திட்டமுறையில் நடத்தப்பட்ட நீட் தேர்வையும் எழுதத் துணிந்தார்.
ஆயுதங்களுடன் சூழ்ந்து நின்ற சிபிஎஸ்இ மாண வர்களுக்கு மத்தியில், மகாபாரத ‘அபிமன்யு’ போல எந்த ஆயுதமும் இல்லாமல் போராடினார். ஆனால், 700 மதிப்பெண்களுக்கு வெறும் 80 மதிப்பெண்களையே அவரால் பெற முடிந்தது.நீட் தேர்விலிருந்து தன்னைப் போன்ற தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைத்து விடாதா? என்றுஏங்கிய அனிதா, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டார். நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறப்படும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85சதவிகித உள்ஒதுக்கீடு வழங் கப்படும் என்று மாநில அரசு கூறிய போதெல்லாம், தனக்கு எப்படியும் டாக்டர் சீட் கிடைத்து விடும் என்று நம்பினார்.
நீட் தேர்வுக்கு விலக்களித்து தமிழக அரசு அவசரச் சட்டம்கொண்டுவரும் என்று கூறப்பட்ட போது, சிபிஎஸ்இ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, தமிழக அரசு அவ சரச் சட்டம் கொண்டுவராவிட்டால் தன்னைப் போன்ற ஏழை- எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தில்லிக்கே சென்று போராடினார்; தன்னைப் போன்ற மாணவர் களை நீதிமன்றம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வாதாடினார்.ஆனால், அத்தனையும் வீணா னது. சமூக நீதிக்கு எதிரான மத்திய பாஜக அரசும், மாநில உரிமையை நிலைநாட்ட திராணியற்ற அதிமுக அரசும் சேர்ந்து ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கே டாக்டர்சீட் என்று கூறி விட்டன.
அதனடிப்படையில் மாணவர் சேர்க்கையை யும் நடத்தி முடித்து விட்டன.இனி தன்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைக்கு அனிதா தள்ளப்பட்டார். நன்றாகப் படித்தும், 1200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்தும், உச்சநீதிமன்றம் வரை போராடியும் டாக்டர் கனவு கலைந்து போனதே என்ற சோகத்திற்கு ஆட்பட்டார். ஒரு வாரமாக மிகுந்த மனச்சோ ர்வுடன் இருந்த வந்த அனிதா, தனது லட்சியம் பறிபோன துயரம் தாளாமல், வெள்ளிக்கிழமையன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.