நாகைபட்டினம் மீன்வள பல்கலைகழக., கவுன்சிலிங் ஒத்திவைப்பு
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையில், பி.எப்.எஸ்சி., மற்றும் பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் வரும் 21, 22ல், பொன்னேரியில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த கவுன்சிலிங், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை கமிட்டி தலைவர், பேராசிரியர் சண்முகம் அறிவித்து உள்ளார்.