உலக ‘யூத்’ வில்வித்தைப் போட்டியில் தீபிகா குமாரிக்குப் பிறகு தங்கம் வென்ற இளம் இந்திய ஜோடி….!
உலக ‘யூத்’ வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜெம்சன் நிங்தோஜம் – அங்கிதா பகத் இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் நடைபெற்ற உலக ‘யூத்’ வில்வித்தைப் போட்டி நடைப்பெற்றது.இந்தப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் ஜெம்சன் நிங்தோஜம் – அங்கிதா பகத் இணை பங்கேற்றது.
போட்டியின் இறுதியில் ஜெம்சன் நிங்தோஜம் – அங்கிதா பகத் இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தீபிகா குமாரிக்குப் பிறகு தங்கம் வென்ற பெருமை ஜெம்சன் – அங்கிதா இணைக்கு கிடைத்துள்ளது.
முன்னதாக 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் தீபிகா குமாரி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இதுதவிர இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.