கோவில்பட்டியில் கனமழை:வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளநீர்..!
கோவில்பட்டியில் நேற்று மதியம் 3.50 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி பகுதிகளில் இருந்து மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாராததால், மழைநீர் வழிந்தோட முடியாமல், நகரில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.