சீன ஓபன் டென்னிஸ்: முதல்முறையாக சாம்பியன் வென்றார் ரஃபேல் நடால்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவும் சாம்பியன் வென்று அசத்தினர்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்றது.
இதன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடால் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோûஸ தோற்கடித்தார்.
சீன ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் நடால், இந்தாண்டில் ஒட்டுமொத்தமாக 6-வது பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியா தனது இறுதிச் சுற்றில் 6-4, 7-6 (3) என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை தோற்கடித்தார்.
கடந்த வாரம் உஹான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கார்ஸியா, இப்போது சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.