மதம் மாறினாரா…?கமல்ஹாசனின் இளைய மகள் அக்க்ஷராஹாசன்..
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்க்ஷராஹாசன் புத்த மதத்துக்கு மாறிவிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாய் அக்ஷூ…! மதம் மாறிவிட்டாயா? லவ் யூ.. அப்படி நீ மாறியிருந்தாலும். காதல் போன்று மதமும் நிர்பந்தத்திற்கு அப்பாற்பட்டது. மகிழ்ச்சியாக வாழவேண்டும் – என்றும் அன்புடன் உன் அப்பா” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு “நீங்கள் இருவரும் ஆச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எப்போதும் எனது அன்பு உங்களுக்கு!” என்று ரீ ட்வீட் செய்துள்ளார்
த்ரிஷா. ஆகவே அக்ஷராஹாசன் மதம் மாறிவிட்டார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அக்க்ஷரா தற்போது, “அது தவறான செய்தி. நான் மதம் மாறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்பாவும் மகளும் நேரிலே பேசிக்க மாட்டங்கலோன்னு என நேட்டிசன்கள் தொடர்ந்து கமலை விமர்சித்து வருகின்றனர்.