கிரிக்கெட்டில் மொய்ன் அலி நிகழ்த்திய சாதனை….!

Default Image
லண்டன்:இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இங்கிலாந்து. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மொயீன் அலி வீசிய 76-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தில் டீன் எல்கர் (228 பந்துகளில் 136 ரன்கள்) ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் காகிசோ ரபாடா (0) ஆட்டமிழந்தார். இதன்பிறகு 78-ஆவது ஓவரை வீசிய மொயீன் அலி, முதல் பந்தில் மோர்கலை (0) வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் வரும் வெள்ளிக்கிழமை ஓல்டு டிராபோர்டில் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார் மொயீன் அலி.
டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் 4-ஆவது சுழற்பந்து வீச்சாளர். ஆனால், இங்கிலாந்தில் ஹாட்ரிக் எடுத்துள்ள முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்.
கடந்த 79 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்.
இதுதவிர , ஒட்டுமொத்தத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 13-ஆவது இங்கிலாந்து வீரர்.
ஓவல் மைதானத்தில் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் மொயீன் அலி.
1957-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர், மொயீன் அலி.
ஒரு டெஸ்ட் போட்டி ஹாட்ரிக் சாதனையுடன் முடிந்தது இது நான்காவது முறை. கடைசியாக தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 1957 – 58-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஹாட்ரிக் சாதனையுடன் முடிந்தது.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்