இயற்கையின் மருத்துவ பயன்கள்
நமது உடலை சரியான முறையில் நன்கு ஆரோக்கியமானதாக பார்த்து கொண்டால் தான் நாம் நம் வாழ்கையை சந்தோசமாக அனுபவிக்க முடியும் . நம் உடல் வலிமையானதாக மற்ற தினமும் நன்கு சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.அவ்வாறு சத்தான உணவு பொருட்கள் நமது வீடுகளில் இருக்கும் பொருட்களிலேயே அதிகமாக இருக்கின்றன. அவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.
1. வாழை தண்டு அதிகம் குளிர்ச்சி குணம் உடையது. எனவே வாழை தண்டு உட்கொள்ளும் பொது தயிர், மோர் உட்கொள்ள கூடாது. பூண்டு , எலுமிச்சை உடன் வாழை தண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தான் உடல் பருமன் அவது குறையும். ரத்த அழுத்தம் குறையும்.
2. கீழாநெல்லி தண்டு மற்றும் கீரை இரண்டையும் இடித்து துணியில் வைத்து சம அளவு விளக்கென்னைசேர்த்து காலை , மாலை கண்களில் உற்றினால் கண்களில் உள்ள கண்புரை குறையும்.
3. தூதுவளை இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு காதில் விட்டு வந்தால் காது அடைப்பு குணமாகும். மேலும் அதன் பழத்தை தேனில் குழப்பி சாப்டு வந்தால் சளி குணமாகும்.
4. வெந்தையம் வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தும் ஒரு பொருளாகும். வெந்தையமமும் குளிர்ச்சி தன்மை கொண்டது. உடலில் வறட்சி தன்மையை போக்கும். சிறுநீரை பெருக்கும்.
5. மிளகு சளி, பசியின்மை போகுகிறது. மேலும் உடலில் திடீர் அரிப்பு,ஆஸ்துமா,சைனஸ் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணியாக இருகின்றது.
6. தினமும் காலையில் சுக்கு காப்பி அருந்தி வந்தால் மூக்கடைப்பு,உடல் பித்தம் குணமாகும். பசிசை துண்டவும்,அஜீரணத்தை போகவும் சிறந்தது.