சீனா செஸ் போட்டியில் காரைக்குடி மாணவர் அசத்தல்…தங்கம் வென்றார்…!
சீனாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் காரைக்குடி மாணவர் அசத்தலாக ஆடி 7-7 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள் சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள ஷில்லாங் நகரில் செப்டம்பர் 27 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றன.
இதில் 14 நாடுகளைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். அதில் 12 வயதுக்கு உள்பட்ட குழுப் போட்டியில் இந்தியா சார்பில் நால்வர் கலந்து கொண்டனர்.
அந்தப் பிரிவில், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் எம்.பிரனேஷூம் இடம் பெற்றிருந்தார்.
இவர் போட்டியில் அற்புதமாக விளையாடி 7-க்கு 7 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தங்கம் வென்ற பிரனேஷை, சிவகங்கை மாவட்ட செஸ் கழகத் தலைவர் ஆர்.எம்.என்.கருப்பையா, துணைத் தலைவர்கள் சேவு.முத்துக்குமார், நா.கண்ணன், மணியம்மை, சற்குணநாதன், ஆனந்த், செயலர் எம்.கண்ணன், பொருளாளர் ஏ.ஜி.பிரகாஷ், செட்டிநாடு செஸ் கழகத் தலைவர் மெ. ஜெயங்கொண்டான், செயலர் பிரகாஷ் மணிமாறன் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.