தமிழருக்கு மரண தண்டனை விதித்தது:சிங்கப்பூர் நிதிமன்றம்!!

Default Image

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக, தமிழ் இளைஞர் ஒருவருக்கு நேற்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.மலேசியாவை சேர்ந்தவர் பிரபாகரன் ஸ்ரீவிஜயன்,27. இவர், பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். 2012ல் சிங்கப்பூர் குடிநுழைவு மையத்தில், இவர் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் போதைப் பொருளை சிங்கப்பூர் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். அந்த கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்தே அந்த காரை பெற்றதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பது தனக்கு தெரியாது என பிரபாகரன் தொடர்ந்து முறையிட்டு வந்தார். இந்நிலையில் 2014, ஜூலை 22ம் தேதி மருந்துகளை தவறாக பயன்படுத்தும் சட்டம், பிரிவு 7ன் கீழ் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.கோலாலம்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடக்கவிருந்த நிலையில், பிரபாகரனின் மரண தண்டனையை ஒத்திவைக்க, அவரது வழக்கறிஞர் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே அந்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இந்நிலையில் பிரபாகரன் ஸ்ரீவிஜயனுக்கு சாங்கி சிறைச்சாலையில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்