ஓரியோ அப்டேட்டால் கதறும் பயனாளர்கள்..!
ஆண்ட்ராய்ட் நிறுவனமானது கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக ஓரியோ (Oreo) இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது.இந்த இயங்குதளம் வெளியான சில நாட்களிலேயே அதிக புகார் வந்து உள்ளதாம்.
புகார்கள்:
ஓரியா இயங்குதளம் கொண்ட மொபைல்களில் வை-ஃபை இயங்கிக்கொண்டிருக்கும் போதும் மொபைல் டேட்டா பறிபோகிறது என்பதுதான் அதிகம் குவியும் புகார்கள்.
மேலும் அலாரம் வைத்தால் அதனை ஆஃப் செய்யவே முடியவில்லை. திடீர் திடீர் என மொபைல் தானாக ரீ ஸ்டார்ட் ஆகிறது என்று பயனாளர்கள் மிக கோபத்துடன் புகார்களை தெரிவிக்கின்றனர்.