கல்லீரல் நோய் தோன்றும் அறிகுறிகள் !!!
கல்லீரல் நோயின் அறிகுறிகள்:
கணையம் அல்லது பித்தப்பையில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக மஞ்சள்காமாலை நோயிற்கான அறிகுறிகள் தென்படும்.
வயிற்றின் வலதுப்பக்கத்தில் கடுமையான வலி ஏற்பட்டால் கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
சிறுநீர் மற்றும் மலத்தில் நிறம் மாற்றம் அடைந்தால் கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப நிலையின் அறிகுறியாகும்.
சீரற்ற செரிமானம், பசியின்மை, எடை இழப்பு போன்ற பிரச்சனைகள் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால், கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
கணுக்கால் மற்றும் கால்களில் நீர் தேங்கி, அதனால் சிறுநீரகக் கோளாறுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், இதயம் செயலிழப்பு மற்றும் நிணநீர் நோய் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் தோல் அதிக உணர்திறன் கொண்டதாக மாறும். அதனால் தோலில் அரிப்பு, வறட்சி மற்றும் நரம்புகள் வெளிப்படையாகக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.