பிரபாஸின் அன்பு பரிசு : விக்ரம் பிரபு மகனுக்காக…
விக்ரம் பிரபு நடித்து தயாரித்துள்ள நெருப்புடா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இவருடைய மகன் விராத் பாகுபலி பிரபாஸின் தீவிர ரசிகராம்.
விராத்தின் பிறந்தநாள் மிக விரைவில் வர இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் பயன்படுத்திய வாள் போன்ற வடிவில் ஒரு வாளை விராத்துக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பியுள்ளார். அந்த வாளில் விராத் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை விக்ரம் பிரபு தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நடிகர் பிரபாஸுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.